வாவ்..! "குட்டி ஸ்டோரி" பாடலை இப்படி கேட்டு பாருங்க - குத்து பாடல் எஃபெக்ட் - வேற லெவல்..!


"மாஸ்டர்" படத்தில் இருந்து வெளியான "குட்டி ஸ்டோரி" பாடல் 24 மணி நேரத்தில் பெற்ற பார்வைகள் மற்றும் லைக்ஸ்களை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து ஒரு குட்டி கதை என்ற பாடலை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். 

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை விஜய் பாட அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியிருந்தார். பாடல் வெளியான, 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வைகள் மற்றும் 1 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றுள்ளது. இத்தகவலை சோனி மியூசிக் நிறுவனம், ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வரலாறு படைத்துவிட்டது என்று கூறி தனது ட்விட்டர் பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளது

இது ஒருபக்கம் இருக்க, அதே பாடலை 1.5x Playback Speed செட் செய்து கேட்பது இந்த பாடலை ஒரு குத்து பாடலை கேட்பது போல உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சரி, செட் செய்து கேட்டுத்தான் பார்ப்போமே என்று நாமும் கேட்டு பார்த்தோம், ஆம் "குட்டி ஸ்டோரி" பாடலில் ஒரு குத்து பாடலும் ஒழிந்து கொண்டிருக்கிறது உண்மை தான்.

நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க,

வாவ்..! "குட்டி ஸ்டோரி" பாடலை இப்படி கேட்டு பாருங்க - குத்து பாடல் எஃபெக்ட் - வேற லெவல்..! வாவ்..! "குட்டி ஸ்டோரி" பாடலை இப்படி கேட்டு பாருங்க - குத்து பாடல் எஃபெக்ட் - வேற லெவல்..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.