அதற்கு சட்டத்தில் இடமில்லை - தனிமைப்படுத்தப்பட்ட நடிகர் விஜய் - இன்னோவா காரில் அழைத்துவரப்படுகிறார்..!


நடிகர் விஜய் தற்போது நெய்வேலி பகுதியில் படப்பிடிப்பில் உள்ளார். இந்நிலையில், அங்கு சென்ற வருமான வரித்துறையினர் முறையாக அவரிடம் சம்மன் கொடுத்து அவரை தனிமைப்படுத்தினர். 

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து, நடிகர் விஜயின் அலைபேசி மற்றும் உதவியாளர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார்.

நெய்வேலியில் இருந்து சென்னைக்கு வர விஜய்தரப்பில் இருந்து அவருடைய ஜாக்குவார் காரை பயன்படுத்திகொள்ள அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் அதனை மறுத்து விட்டனர்.

வேண்டுமென்றால் இரண்டு அதிகாரிகள் என்னுடைய காரில் வாருங்கள் என்று விஜய் கேட்டதாகவும் ஆனால், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளனர் வருமான வரித்துறையினர். 

இதனை தொடர்ந்து, நெய்வேலியில் இருந்து வருமான வரித்துறையினரின் இன்னோவா காரில் நடிகர் விஜய் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். இதனால், மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Share it with your Friends