"என்னை காப்பி அடிக்குற வேலை'லாம் வேண்டாம்" - நயன்தாராவை சீண்டிய பிக்பாஸ் பிரபலம் - செம்ம கடுப்பில் ரசிகர்கள்..!


சமீப காலமாக சின்னத்திரை மற்றும் இணைய உலகில் நடிகை மீராமிதுன் பெரிய சர்ச்சை நாயகியாக உருவெடுத்து வருகிறார். ரசிகர்கள் பலரும் இவரை ஒரு காமெடி பீசாக தான் பார்கிறார்கள். ஆனால், அவர் தன்னை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

தமிழில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு அவரது நடவடிக்கைகள் மிகவும் மோசமாகவும், தமிழக மக்களை வெறுப்பேற்றும் வகையிலும் அமைந்து வருகிறது. 

நடுரோட்டில் நின்று புகைப்பிடிப்பது, ஆண் நண்பர்களுடன் அசிங்கமான புகைப் படங்களை வெளியிடுவது, டான்ஸ் என்ற பெயரில் ஆண்களை கட்டி உரசுவது என தொடர்ந்து அனைவரது வெறுப்புகளையும் பெற்றுவருகிறார். 

இந்நிலையில் நயன்தாராவை ஜாடைமாடையாக தீட்டியது அவரது ரசிகர்களிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றனர். 

அப்போது நயன்தாராவின் செல்போன் கவர் சிவப்பு கலரில் இருந்தது. மேலும் கண்ணாடியில் நின்று தனது சிவப்புக்கலர் மொபைல் கவரை வைத்து போட்டோ எடுத்தார். 

அதற்கு உடனே மீராமிதுன், தன்னுடைய புகைப்படத்தை பார்த்துவிட்டு தான் நயன்தாரா இப்படி செய்கிறார் எனவும், நயன்தாரா இனிமேல் இப்படி யாரையும் காப்பி அடிக்க வேண்டாம் எனவும் பேசியுள்ளார். 

மேலும் இதுபோன்று யாரேனும் என்னை காப்பி அடித்தால் இந்த அழகிய புகைப்படம் எடுக்க காரணமாயிருந்தவர் மீராமிதுன் தான் என பதிவிடுமாறு கூறியுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள், மீரா மிதுனுக்கு பப்ளிசிட்டி பைத்தியம் முத்திப்போய்விட்டது போல என அவரை கலாய்த்து வருகின்றனர். மேலும் நயன்தாராவை ஜாடைமாடையாக பேசியதற்கு நயன்தாராவின் ரசிகர்கள் மீரா மிதுன் மீது செம்ம கடுப்பில் உள்ளனர்.

"என்னை காப்பி அடிக்குற வேலை'லாம் வேண்டாம்" - நயன்தாராவை சீண்டிய பிக்பாஸ் பிரபலம் - செம்ம கடுப்பில் ரசிகர்கள்..! "என்னை காப்பி அடிக்குற வேலை'லாம் வேண்டாம்" - நயன்தாராவை சீண்டிய பிக்பாஸ் பிரபலம் - செம்ம கடுப்பில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.