நிஜமாவே பிரபாஸ் இல்லையா..? - பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்யவுள்ள நடிகை அனுஷ்கா.!


‘பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்காவின் மார்கெட் அதிகரித்த வண்ணம் இருந்தது. பாகுபலி படத்தில் இளமையாக நடித்த நடிகை தமன்னாவைவிட, இளவரசியாகவும், அம்மாவாகவும் நடித்த நடிகை அனுஷ்காவைத்தான் அதிகம் பேருக்குப் பிடித்திருந்தது. 

நடுவில், அனுஷ்கா ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்த்தார். அந்த படமும் ஹிட் ஆனது. அதே நேரம், இவருடைய உடல் எடை ஏறிக்கொண்டே இருக்கின்றது. 
எவ்வளவு கடின முயற்சி செய்து உடலை குறைத்தாலும் மீண்டும் உடல் எடை இருகின்றது.

இடையிடையே சமீபத்தில், கோயில் கோயிலாகச் சென்று வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். தற்போது, காசர்கோடு அருகிலுள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். 

அவருடன், குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இப்படி கோயில் கோயிலாகச் சென்று அனுஷ்கா வழிபட்டு வருவதுஅவருடைய திருமணம் கை கூடத்தான் என பேச்சுகள் எழுந்தன.ஜாதகத்தில் உள்ள பிரச்னையை போக்கவே அனுஷ்கா கோயில் கோயிலாக சுற்றி வருகிறார் என்று கூறினார்கள்.

பாகுபலி ஹீரோ பிரபாஸை நடிகை அனுஷ்கா காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் எனவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதுவரை இருவரும் இது குறித்து வாயே திறக்கவில்லை.

இந்நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வட இந்திய கிரிக்கெட் வீரரான அவர், தென்னிந்திய அணி ஒன்றுக்காக நடந்த போட்டிகளில் விளையாடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஆனால், இதுபற்றி எந்த விதமான அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.  யார் அந்த கிரிக்கெட் வீரர் என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அனுஷ்கா ரசிகர்கள்.
Advertisement

Share it with your Friends