இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #திமுக_தலைவர்_விஜய் - என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!


தேரை இழுத்து தெருவுல விட்ட கதையாக நடிகர் விஜய்யை இழுத்து திமுக விட்டுவிட்டார்கள் உடன்பிறப்புகள். விஜய் மீது நடத்தபட்ட வருமான வரி சோதனைக்கு அரசியல் சாயம் பூசி இதிலும் அரசியல் செய்ய கிளம்பி விட்டாது திமுக.

திமுக MP தயாநிதி மாறன் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் இழுத்து விட, உடன் பிறப்புகள் விஜய் தான் அடுத்த திமுக தலைவர் என்னும் ரேஞ்சுக்கு இறங்கி போஸ்டர் அடித்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை #திமுக_தலைவர்_விஜய் ட்ரெண்ட் செய்ய, அது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது. விஜய் திமுகவிற்கு ஆதரவு கொடுப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் உடன் பிறப்புகள். விஷயம் இவ்வளவு விவகாரம் ஆன பின்பும் நடிகர் விஜய் மௌனம் காத்து வருகிறார்.

விஜய் ரசிகர்களை திமுகவிற்கு ஆதவராவாக திரட்ட அனைத்து உடன்பிறப்புகளும்  தீடீரென விஜய் ரசிகர்களாக மாறி விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என டிவிட்டரில் உருண்டு கொண்டிருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை வைத்து ’’தளபதி விஜய்க்கு வந்த கூட்டத்தை பாருங்கள். மூன்று தலைமுறையாக கட்சியை கட்டுபாட்டில் வைத்திருக்கும் கருணாநிதி குடும்ப வாரிசு உதயநிதிக்கு வந்த கூட்டத்தையும் பாருங்கள்" 

விஜய் தான் திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா? என உடன் பிறப்புகளே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

இது எங்கே சென்று முடியப்போகிறது என்று தெரியவில்லை. கடந்த வருடம் அஜித்தை இதே போன்று பிரபல அரசியல் கட்சி அவரது ரசிகர்களை வைத்து அஜித் ஆதரவு தருவது போன்ற பிம்பத்தை உருவாக்கிய போது, அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. எனது ரசிகர்கள் அரசியலில் ஈடுபடுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம். என்னுடைய பெயரை பயன்படுத்த வேண்டாம் என்று அறிக்கை விட்டார்.

இது போன்று விஜய் ஏதாவது அறிக்கை விடுவாரா..?அல்லது அமைதி காப்பாரா..? என்று தெரியவில்லை. இணையத்தில் வைரலாகி வரும் போஸ்ட்களை பார்த்தால் தூக்கிவாரிப்போடும்.இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #திமுக_தலைவர்_விஜய் - என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..! இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் #திமுக_தலைவர்_விஜய் - என்ன காரணம்ன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..! Reviewed by Tamizhakam on February 11, 2020 Rating: 5
Powered by Blogger.