அமலா பாலை படுக்கைக்கு அழைத்த நபர் - நீதி மன்றம் அதிரடி உத்தரவு..!


பிரபல நடிகை அமலாபாலிடம் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் மலேசியாவில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததாக கூறினார். 

நடன நிகழ்ச்சியின் முடிந்த பின் இரவு ஸ்பெஷல் நைட் பார்ட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். என்ன ஸ்பெஷல் நைட் பார்ட்டி என கேட்டதற்கு, உங்களுக்கு தெரியாதா..? என்று கேட்டதாக கடந்த ஆண்டு சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வந்தனர். இந்நிலையில் அமலா பால் பொய் புகார் அளித்துள்ளார் என்றும் இந்த வழக்கை ரத்து செய்வதோடு, விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டுமென பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இதனை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அமலா பாலை படுக்கைக்கு அழைத்த நபர் - நீதி மன்றம் அதிரடி உத்தரவு..! அமலா பாலை படுக்கைக்கு அழைத்த நபர் - நீதி மன்றம் அதிரடி உத்தரவு..! Reviewed by Tamizhakam on February 18, 2020 Rating: 5
Powered by Blogger.