என்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை மோசமாக திட்டிய ராதிகா சரத்குமார்


கடந்த 1978-ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். 

இவர் வெள்ளித்திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி பல வருடங்களாக கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார். ராதிகாவின் தங்கை நடிகை நிரோஷாவும் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை. 

இவரையும் பல படங்களில் நாம் கதாநாயகியாக பார்த்திருப்போம். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய நிரோஷா, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

அவர் பேசிய போது "நானும் என் அக்கா ராதிகாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அந்த படத்தில் நான் ஒரு அரத்தான தங்கச்சி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அக்கா ஒரு அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அப்போது ஒரு ஷாட்டில் நான் ஐஸ்க்ரீமை ஸ்டைலாக எடுக்க வேண்டும், ஆனால், என்னால் அந்த ஷாட்டை சரியாக பண்ண முடியவில்லை. நான் அக்காவிடம் போய் அதை கூறினேன்.

அதனால் கோபமான அவர் "என்ன DASH-க்கு நீ நடிக்க வந்த..?’ என்று அனைவரின் முன்னிலையிலும் திட்டினார். நான் அதற்கு பின்பு அந்த காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்தேன்" என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நிரோஷா.

என்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை மோசமாக திட்டிய ராதிகா சரத்குமார் என்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை மோசமாக திட்டிய ராதிகா சரத்குமார் Reviewed by Tamizhakam on February 28, 2020 Rating: 5
Powered by Blogger.