ப்ரண்ட்ஸ் படத்தில் சிறுவயது விஜய்யாக தோன்றிய சிறுவன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - புகைப்படம் உள்ளே..!


நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் "ப்ரண்ட்ஸ்". 

இந்த படத்தில் சிறுவயதில் விஜய்யாக நடித்தவர் சிறுவன் "பரத் ஜெயந்த்". 1988ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் ப்ரண்ட்ஸ் நடிக்கும் பொழுது இவருக்கு 14 வயது. 

இவர் தனது பள்ளிப்படிப்பினை M.C.T.M சர்வதேச பள்ளியில் முடித்து, லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் மற்றும் எம்.பி.ஏ முடித்து, பின்பு மாடலிங் துறையில் பணி புரிந்துவந்தார். 

மேலும், வானத்தைப் போல, பிரியமான தோழி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். பின்பு சிறிது நடிப்பிற்கு இடைவெளி விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்திய பரத், சில ஆண்டுகள் கழித்து விக்ரமன் இயக்கத்தில் இளமை நாட்கள் என்ற படத்தில் நடித்தார். 

மேலும், அதர்வா- நயன்தாரா நடித்த இமைக்க நொடிகள் படத்தில் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். தற்போது, இவருக்கு 34 வயதாகின்றது. 


இந்நிலையில், பரத் ஜெயந்த் இப்போது எவ்வாறு இருப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சில புகைப்படங்கள் இதோ.


Advertisement

Share it with your Friends