காதலன் குறித்து வெளிப்படையாக கூறி தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட ப்ரியா பவானி ஷங்கர்.!


சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை ப்ரியா பவானி ஷங்கர், 'மேயாத மான்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 

தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் இப்போது, 'பொம்மை, வான், மாஃபியா, குருதி ஆட்டம்' உட்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். 

டிவியில் நடிக்கும் போது சரி, அதற்கு பின்னரும் சரி இவரை சுற்றி காதல் செய்திகள் இறக்கை கட்டி பறந்தன. சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா உடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். 

ஆனால், இதை மறுத்து சூர்யா பதிவிட்டார். ப்ரியா பவானி ஷங்கர், நீண்ட காலமாகவே தனது கல்லூரி கால நண்பரை காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. 

இருப்பினும் அவருடன் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் ப்ரியா பவானி ஷங்கர். சமீபத்தில் கூட அந்த நண்பருடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார்.

இதனை நாளாக இலை மறை காய் மறையாக தனது காதலன் குறித்து பேசி வந்த ப்ரியா பவானி ஷங்கர் தற்போது காதலன் குறித்து ஒரு பதிவை வெளிப்படையாக வெளியிட்டிருந்தார். இது குறித்து, பேசிய இவர் "என் காதலர் ராஜ் அவர்களின் பிறந்த நாள் அன்று வாழ்த்துகள் கூற இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலானது. சென்ற ஆண்டு கூட நான் அவருக்கு வாழ்த்து சொல்லியிருந்தேன்".

தொடர்ந்து பேசிய அவர், பேசிய இவர் "நாங்கள் இளம் பருவத்திலேயே சந்தித்துக் கொண்டோம். அப்போது இருந்த அன்பு தற்போதும் மாறாமல் அப்படியே இருக்கிறது. நாளை எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளை பார்த்துக் கொள்ள ஏற்றவராக இருப்பார் ராஜ். என் காதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை. கல்யாணம் குறித்து சீக்கிரமே சொல்கிறேன்" என்று ப்ரியா பவானி சங்கர் மனம் திருந்து தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் திடீரென திருமணம் அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறி தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டார் எனவும் இதனால் அவருக்கான பட வாய்ப்புகளை குறைத்துவிடும் என கூறுகிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

காதலன் குறித்து வெளிப்படையாக கூறி தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட ப்ரியா பவானி ஷங்கர்.! காதலன் குறித்து வெளிப்படையாக கூறி தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட ப்ரியா பவானி ஷங்கர்.! Reviewed by Tamizhakam on February 26, 2020 Rating: 5
Powered by Blogger.