முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்க சம்மதித்த நிவேதா தாமஸ்..!


சமுத்திரகனி இயக்கிய போராளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நிவேதா தாமஸ், பின்னர் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்தார். 

இதேபோல் 2015-ம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த நிவேதா தாமஸ், 4 ஆண்டுகளுக்கு பின் தர்பார் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். 

இப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அசத்தியுள்ளார். கமல், ரஜினி, விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் நடித்துள்ள நிவேதா தாமஸ், தற்போது அஜித் படத்தில் நடிக்க உள்ளார். 

அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நிவேதா தாமஸ் நடிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் வேடத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். 

தமிழில், நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் நிவேதா தாமஸ். முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் இந்த கதாபாத்திரத்தில் துணிந்து நடிக்கவுள்ளார் நிவேதா தாமஸ்.

முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்க சம்மதித்த நிவேதா தாமஸ்..! முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கிய கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடிக்க சம்மதித்த நிவேதா தாமஸ்..! Reviewed by Tamizhakam on February 14, 2020 Rating: 5
Powered by Blogger.