"ரெட் சில்லி, செத்துட்டேன், செம்ம ஹாட், தேவதை இப்படித்தான் இருக்குமோ..?" - ரசிகர்களை உருக வைத்த சமந்தா - புகைப்படங்கள் உள்ளே..!


நடிகை சமந்தா தன்னை புடவைகளின் காதலி என்று பல இடங்களில் கூறியுள்ளார். புடவையிலேயே வகை வகையான ஸ்டைல்களை பின்பற்றி நேர்த்தியாக கையாளும் அழகி. 

கைத்தேர்ந்த வடிவமைப்பாளர்களை கையில் போட்டுக்கொண்டு டிரெண்டுகளை அவ்வபோது அள்ளித்வீசும் அழகு தேவதை. தமிழில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய 96 படம் தெலுகிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 

அதில் ஜானுவாக சமந்தா நடிக்கிறார். ஜானு என்பது கதாபாத்திரத்தின் பெயர் மட்டுமல்ல. படத்தின் பெயரும் "ஜானு"தான். தமிழில் "96" என்று இருந்த தலைப்பை மாற்றி "ஜானு" என வைத்து விட்டார்கள். 

இதன் மூலம் அந்தப் படத்தை தாங்கி நிற்பதே சமந்தாவின் நடிப்பில்தான் என்பது தெரிகிறது. தமிழில், "96" படத்தை பார்த்து உருகிய இளசுகள் அடுத்த ஜானு படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.


இந்நிலையில், இந்த படத்தில் தோன்றும் லுக்கில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இப்போதே உருக வைத்து வருகிறார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், ரெட் சில்லி, செத்துட்டேன், செம்ம ஹாட், தேவதை இப்படித்தான் இருக்குமோ..? என உருக உருக கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.


Advertisement

Share it with your Friends