" இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்" -ரசிகர் செய்த வேலையால் கடுப்பான நடிகை சமந்தா - வைரல் வீடியோ..!


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த காதல் காவியம் 96 திரைப்படம். முதல் காதல், பள்ளி ரீயூனியன் என இனம் புரியா பருவத்தில் வரும் முதல் காதலை அழகாக விவரித்த இத படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமாரே தான், தெலுங்கு ரீமேக்கையும் இயக்கியுள்ளார். 

அதேபோல சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த கெளரி கிஷன் தான், சின்ன வயசு சமந்தாவாகவும் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்த படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தீவிர பெருமாள் பக்தையான நடிகை சமந்தா அடிக்கடி திருப்பதி செல்வது வழக்கம். 

அதுவும், ஒவ்வொரு முறையும் மலைமீது படிக்கட்டுகள் வாயிலாகவே ஏறி செல்வார். இந்நிலையில், ஜானு படத்தின் வெற்றியை தொடர்ந்து திருப்பதிக்கு சென்ற அவர் வழக்கம் போல படிக்கட்டுகள் வழியாக ஏறி சென்றார். 


அப்போது, ரசிகர் ஒருவர் சமந்தாவை பின் தொடர்ந்து கொண்டே வந்து அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றார். இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம் என்று அவரை எச்சரித்து விட்டு விறுவிறுவென நடையை தொடர்ந்தார் சமந்தா.

" இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்" -ரசிகர் செய்த வேலையால் கடுப்பான நடிகை சமந்தா - வைரல் வீடியோ..! " இந்த வேலையெல்லாம் இங்க வேண்டாம்" -ரசிகர் செய்த வேலையால் கடுப்பான நடிகை சமந்தா - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.