"கவலை படாதிங்க.. விக் வச்சிக்குறேன்" - ரசிகருக்கு நடிகை ஓவியா பதிலடி..!


சினிமாவில் நடித்து பிரபலமானதை விட பிக்பாஸ் என்ற தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் நடிகை ஓவியா.

இவருக்கு ரசிகர் மன்றமெல்லாம் திறந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்க. இவர், எப்போதும் ஓப்பனாக தன்னுடைய கருத்தை கூறுபவர். அதற்காகவே அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தபோது சமூக வலைதளங்களில் அவருக்கு ஆர்மி கூட துவங்கப்பட்டது. 

அப்போது அவருக்கு அதிக அளவில் ரசிகர்களா இருந்தனர். ஆனால், இப்போது இல்லை என்பதும், அதற்க்கான காரணமும் வேறு கதை. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த கையேடு தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றினார் ஓவியா. 

என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, தன் முடியை கேன்சர் பாதித்தவர்களுக்கு விக் செய்ய கொடுத்துவிட்டதாக கூறினார் ஓவியா. அப்போது இருந்தே ஓவியா முடியை நீளமாக வளர்க்காமல் ஒரே விதமான ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். 


இதை சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓவியா, "நான் மூளையை வளர்க்க நினைக்கிறேன், முடியை அல்ல" என கூறியுள்ளார். மேலும் அடுத்த ட்விட்டில் “வருத்தபடாதிங்க.. நான் விக் வெச்சிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் அவர்.

"கவலை படாதிங்க.. விக் வச்சிக்குறேன்" - ரசிகருக்கு நடிகை ஓவியா பதிலடி..! "கவலை படாதிங்க.. விக் வச்சிக்குறேன்" - ரசிகருக்கு நடிகை ஓவியா பதிலடி..! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.