காப்பி சர்ச்சையில் சிக்கிய டாக்டர் ஃபர்ஸ்ட்லுக் - இந்த முன்னணி நடிகரின் ட்ராப் ஆன படத்தின் கதையா..?


தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவை ஆட்டிப்படைத்து வரும் ஒரு விஷயம். காப்பி, இன்ஸ்பிரேஷன், டிட்டோ என ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் விஷயங்களாக சினிமா மாறி விட்டது.

ஃபர்ஸ்ட் லுக் காப்பி, சிங்கிள் ட்ராக் காப்பி, கடைசியில் படமே காப்பி தான் என்று கூறி விடுகிறார் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் ரசிகர்கள். சமீப காலமாக, அதிக காப்பி சர்ச்சையில் சிக்கியவர் இயக்குனர் அட்லி.

மெர்சல் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனை நடிகர் விஜய்யும், இயக்குனர் அட்லியும் சந்திக்க சென்ற போது பின்னால் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை வைத்து கலாயத்தார் கமல்ஹாசன்.

இது எதோ எதேர்ச்சையாக நடந்தது என கூறி வந்தனர். ஆனால், ஒரு பேட்டியில் கமல்ஹாசன் என்னுடைய அலுவலகத்தில் என்னுடைய படங்களில் பல போஸ்டர்கள் இருக்கின்றது. ஆனால்,அந்த அபூர்வ சகோதரர்கள் போஸ்டர் எதேர்ச்சையாக வைக்கப்பட்டது அல்லது என்பது மட்டும் உறுதி என கூறினார்.

இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஏற்கனவே, நடிகர் தனுஷ் நடிக்கவிருந்த "டாக்டர்ஸ்" படத்தின் போஸ்டரை தழுவி தான் இந்த போஸ் உருவாக்கப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.


மேலும், தனுஷ்நடிக்க விருந்து, பிறகு ட்ராப் ஆகிப்போன "டாக்டர்ஸ்" படத்தின் கதை தான் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இந்த படத்தின் கதை என்றும் கூறி வருகிரார்கள.

காப்பி சர்ச்சையில் சிக்கிய டாக்டர் ஃபர்ஸ்ட்லுக் - இந்த முன்னணி நடிகரின் ட்ராப் ஆன படத்தின் கதையா..? காப்பி சர்ச்சையில் சிக்கிய டாக்டர் ஃபர்ஸ்ட்லுக் - இந்த முன்னணி நடிகரின் ட்ராப் ஆன படத்தின் கதையா..? Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.