இளம் பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை - வாட்சப்பில் தற்கொலை கடிதம் - அதிர்ச்சியில் திரையுலகம்..!


பிரபல கன்னட பாடகி சுஷ்மிதா. இவர் குடும்ப பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் திரையுலகில் மிகவும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுஷ்மிதாவின் திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே நகர்ந்துள்ளது. 

சில மாதங்கள் கழித்து இவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு கணவர் சரத்குமாரின் பெரியம்மா வைதேவி மற்றும் சரத்குமாரின் சகோதரி கீதா ஆகியோர் குடி வந்துள்ளனர். 

நிம்மதியாக திருமண வாழ்க்கை வாழ்ந்து வந்த சுஷ்மிதாவிற்கு இவர்கள் குடி வந்த சில நாட்கள் கழித்து கணவரிடையே கருத்து வேறுபாடு வர துவங்கியுள்ளது. 

சுஷ்மிதா-வை டவுரி கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளார்கள் சரத்துக்குமார் குடும்பத்தினர். இதனால் சுஷ்மிதாவிற்கு உடல் அளவிலும் மனதளவிலும் மிக பெரிய காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


நேற்று முன்தினம் இதனை குறித்து இவர்களுக்கு இடையே மிக பெரிய பிரச்சனை ஏற்பட்டதால் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார் சுஷ்மிதா. மேலும் அங்கு சில நேரம் தனது தாய் மற்றும் சகோதரிடம் பேசிவிட்டு படுக்கை அறைக்கு சென்றுள்ளார் சுஷ்மிதா. 

காலையில் வெகுநேரம் ஆகியும் சுஷ்மிதாவின் அறை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் உடனடியாக தனது மொபைல் போனை எடுத்து பார்த்துள்ளார். 

அதில் சுஷ்மிதா வாட்ஸப்பில் அனுப்பிய தற்கொலை கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்தில் சுஷ்மிதா கூறியுள்ளதாவது, அம்மா என்னை மன்னித்து விடு, எனது கணவர் அவரது பெரியம்மா பேச்சை கேட்டுக்கொண்டு என்னிடம் டவுரி கேட்டு கொடுமை படுத்துகிறார். 

நான் பல முறை அவர்களின் காலில் விழுந்தும் அவர்கள் அதை கேட்க வில்லை. இந்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் அந்த வீட்டில் கூட தற்கொலை செய்ய முயற்சித்தேன். 

ஆனால் என்னால் முடியவில்லை, பிறந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டால் தான் சரியான ஆதாரங்கள் கிடைக்கும் என்று இங்கு வந்தேன். மேலும் இதனை வைத்து கொண்டு அந்த நபர்களுக்கு மிக பெரிய தண்டனையை வாங்கி கொடுங்கள் அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும் என்று குறிப்பிட்டிருந்தார் சுஷ்மிதா. 

இதனை குறித்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பாடகி சுஷ்மிதாவின் வயது தற்போது 26 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இளம் பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை - வாட்சப்பில் தற்கொலை கடிதம் - அதிர்ச்சியில் திரையுலகம்..! இளம் பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை - வாட்சப்பில் தற்கொலை கடிதம் - அதிர்ச்சியில் திரையுலகம்..! Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.