தயாரிப்பாளர் கூறிய ஒரு வார்த்தை - சொல்லாமல் கொள்ளாமல் ஹோட்டலில் இருந்து எஸ்கேப் ஆன "பட்டாஸ்" பட நடிகை..!


அஸ்வந்தாமா என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் நடிகை மெஹ்ரீன் பிர்சடா. பொங்கல் பண்டிகையன்று வெளியான தனுஷ்-ன் "பட்டாஸ்" படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். 

இந்நிலையில், அஸ்வந்தாமா படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் அழைத்துள்ளார். ஆனால் நடிகை ஹோட்டல் அறையில் இருந்துகொண்டு தனக்கு ஸ்கின் பிரச்சனை இருப்பதாக கூறி தற்போது வரமுடியாது என போனில் கூறிவிட்டாராம். 

அதனால் கோபமான தயாரிப்பாளர் 'நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நான் உங்கள் ஹோட்டல் பில் செட்டில் பண்ண மாட்டேன்' என ஒரு வார்த்தை கூறினாராம். 

அதனால் கோபமான நடிகை மெஹரீன் ஹோட்டலில் இருந்து எதுவும் சொல்லாமல் பேக்-அப் செய்து கொண்டே எஸ்கேப் ஆகி விட்டாராம். அதன்பின், தயாரிப்பாளரை அணுகிய ஹோட்டல் நிர்வாக அவரிடம் பிரச்சனை செய்து நடிகை தங்கியதற்கு கட்ட வேண்டிய பில் தொகையை வாங்கியிருக்கிறார்கள்.

தற்போது தான் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவரை பற்றிய இது போன்ற நெகடிவ்வானசெய்திகள் வருவது இவரது சினிமா எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும் என்கிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

தயாரிப்பாளர் கூறிய ஒரு வார்த்தை - சொல்லாமல் கொள்ளாமல் ஹோட்டலில் இருந்து எஸ்கேப் ஆன "பட்டாஸ்" பட நடிகை..! தயாரிப்பாளர் கூறிய ஒரு வார்த்தை - சொல்லாமல் கொள்ளாமல் ஹோட்டலில் இருந்து எஸ்கேப் ஆன "பட்டாஸ்" பட நடிகை..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.