திருட வந்த இடத்தில் ஒரு பொருளை பார்த்துவிட்டு அங்கேய தங்கிய திருடன் - காலையில் காத்திருந்த அதிர்ச்சி..!


மும்பை பகுதியில் திருட வந்த இடத்தில் திருடிக்கொண்டு போகாமல் அங்கேயே தங்கிய திருடன் பற்றிய தகவல் வெளியாகி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

அப்படி என்னகாரணத்தால் அந்த திருடன் அந்த வீட்டிலேயே தங்கி விட்டான் என்று பார்க்கலாம் வாங்க. 

மும்பையில், உள்ள அடுக்குமாடிக் குடியிருந்த நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் வாங்கியுள்ளார். ஆனால், அந்த வீட்டில் தனது வீட்டில் அடைப்பாச்சாரமாக இருந்த சில பொருட்களை மட்டும் அங்கே கொண்டு போய் வைத்துவிட்டு தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் காலை எழுந்த போது புது வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்து கொண்டிருந்தன. யாரு லைட்டை போட்டது, ஒரு வேலை நாம் தான் இரவு லைட்டை ஆஃப் பண்ணாம வந்துட்டோமா..? என சந்தேகமடைந்து சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். 

அவனை பல முறை கத்தி கத்தி எழுப்ப முயற்சி செய்துள்ளார். ஒருவேளை இறந்து விட்டானோ என பீதி வேறு அவருக்கு இருந்துள்ளது. எதுக்கு டா வம்பு என போலிசாரிடம் புகார் தெரிவித்து விட்டார். விரைந்து வந்த போலீசார் அவனை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர், மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த சஞ்ஜீவ் என்பதும் திருடுவதற்காக சென்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், அந்த வீட்டில் விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள் இருப்பதை பார்த்ததும் காஞ்ச மாடு கம்பில் புகுந்தது போல முடிந்த வரை மூக்கு முட்ட குடித்திருக்கிறான். இறுதியில் எழுந்து நடக்க கூட முடியாத அளவுக்கு போதை தலைக்கு ஏறி விடவே அங்கே படுத்து தூங்கியுள்ளான் அந்த திருடன்.

திருட வந்த இடத்தில் ஒரு பொருளை பார்த்துவிட்டு அங்கேய தங்கிய திருடன் - காலையில் காத்திருந்த அதிர்ச்சி..! திருட வந்த இடத்தில் ஒரு பொருளை பார்த்துவிட்டு அங்கேய தங்கிய திருடன் - காலையில் காத்திருந்த அதிர்ச்சி..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.