கேரளாவில் முன்னணி நடிகரிடம் தஞ்சம் புகுந்த விவாகரத்தான இளம் நடிகை - ரேஞ்சே வேறயாம்..!


தமிழில் ஒரு சில படங்களில் நடித்த அந்த மலையாள நடிகை, இங்கு ஒரு இளம் நடிகரை காதலித்து திருமணம் செய்தார். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை இவருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். 

ஆனால், நடிகர் தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வருவதாக கூறி தனது தாய்நாடான கேரளாவிற்கு சென்றுவிட்டார். அங்கு. டாப் ஹீரோவாக வளம் வரும் திருமணம் ஆன நடிகர் ஒருவரிடம் பாதுகாப்பு கேட்டிருக்கிறார். 

அவரும் பெருந்தன்மையுடன் அடைக்கலம் கொடுத்தது மட்டுமில்லாமல் தனது படத்திலும் நடிக்க வைத்தார். அந்த படம் பொசுக்குன்னு ஹிட் அடித்து விட்டது. இதனால் நடிகைக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிகின்றன.

கமிட் ஆன படங்களின் ஹீரோக்கள் எல்லாம் பெரிய ஹீரோக்கள். இந்த படங்கள் எல்லாம் மிஸ் ஆகாமல் ரிலீஸ் ஆகி விட்டால் கேரளாவில் இந்த நடிகையின் ரேன்ஞ்சே வேற என்கிறார்கள்.
Advertisement

Share it with your Friends