ரகசியமாக திருமணம் நடந்ததற்கு இது தான் காரணம் - வெளிப்படையாக கூறிய யோகி பாபு


காமெடி நடிகர் யோகி பாபு தான் தமிழ் சினிமாவின் தற்போதையை ட்ரெண்டிங் காமெடியன். ரஜினி, அஜித், விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் தான் காமெடி நடிகர்.

இந்நிலையில், பிப்ரவரி 5-ம் தேதி இவரது திருமணம் திடீரெனே ரகசியமாக நடந்து முடிந்தது. அவரது குல தெய்வ கோவிலில் பார்கவி என்ற பெண்ணை அவசரமாக, ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், ஏன் இப்படி ரகசியமாக திருமணம் என்று யோகி பாபு முதன் முறையாக பேசியுள்ளார். அதில் அவர், முதலில் நான் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், யாரையும் அழைக்க முடியவில்லை. எல்லோரையும் அழைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.

ஆனால், தவிர்க்க முடியாத காரணத்தால் என்னால் அழைக்க முடியாமல் போய்விட்டது. கண்டிப்பாக அடுத்த மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும். அதில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரகசியமாக திருமணம் நடந்ததற்கு இது தான் காரணம் - வெளிப்படையாக கூறிய யோகி பாபு ரகசியமாக திருமணம் நடந்ததற்கு இது தான் காரணம் - வெளிப்படையாக கூறிய யோகி பாபு Reviewed by Tamizhakam on February 07, 2020 Rating: 5
Powered by Blogger.