"மாஸ்டர்" படம் குறித்து பொத்தி வைத்திருந்த ரகசியத்தை உடைத்த இசையாமைப்பாளர் அனிருத்..! - ரசிகர்கள் கொண்டாட்டம்..!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் முதல் லுக், இரண்டாவது லுக், மூன்றாவது லுக் என்று முன்று போஸ்டர்களை பட நிறுவனம் வெளியிட்டிருந்தது. 

அந்த போஸ்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகள் கடந்த சில தினங்களாக நெய்வேலி நிலகரி சுரங்கத்தில் எடுக்கப்பட்டன. 

இதற்கிடையில், நெய்வேலியில் சூட்டிங்கில் இருந்த விஜயை கட்டாயமாக அழைத்துச் சென்று வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், நெய்வேலியில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று பா.ஜ.கவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அதனால், ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் நெய்வேலியில் குவிந்தனர். அதனால், மாஸ்டர் படமும் விஜயும் பேசுபொருளாயினர். இந்தநிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன் படி, வரும் பிப்ரவரி 14-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "ஒரு குட்டிக்கதை" என்ற சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆகின்றது. இந்நிலையில், இந்த படத்தில் யார் குட்டிக்கதை பாடலை பாடியது என கண்டுபிடியுங்கள் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் தளபதி தான் குட்டிக்கதை பாடலை பாடியுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

--Advertisement--
Share it with your Friends