எதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்தமாக பகிர்ந்த நயன்தாரா..! ரசிகர்கள் ஆச்சரியம் - வைரலாகும் புகைப்படங்கள்


நடிகை நயன்தாரா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் “மூக்குத்தி அம்மன்’ படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக தீவிர விரதம் மேற்கொண்டு வருகிறார். 

அடுத்து அவரது நடிப்பில் “நெற்றிக்கண்’ படம் உருவாகிறது. இந்தப் படத்தை அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்குகிறார். 

இவர் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த “அவள்’ படத்தை இயக்கியவர். கொரியா படமான “பிளைண்ட்’ படத்தைத் தழுவி “நெற்றிக்கண்’ உருவாகிறது. மேலும், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் "தலைவர் 168" படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டிற்கு படப்பிடிப்பிற்காக  சென்றிருந்த போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு எதார்த்தமாக எடுத்தது என்று கூறி அந்த புகைப்படத்தை ரசிகர்களின் கண்களுக்கு பதார்தமாக்கியுள்ளார். 


பொதுவாகவே நடிகைகள் மேக்கப் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட மாட்டார்கள். ஆனால், நயன்தாரா அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். அனேக நேரங்களில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்களையே பதிவிடுகிறார். இது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.


எதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்தமாக பகிர்ந்த நயன்தாரா..! ரசிகர்கள் ஆச்சரியம் - வைரலாகும் புகைப்படங்கள் எதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்தமாக பகிர்ந்த நயன்தாரா..! ரசிகர்கள் ஆச்சரியம் - வைரலாகும் புகைப்படங்கள் Reviewed by Tamizhakam on February 03, 2020 Rating: 5
Powered by Blogger.