வேலை நேரத்தில் குறுக்கீடு - வருமான வரித்துறையினர் மீது வழக்கு தொடரலாம் - பா.ஜ.க., மூத்த தலைவர் அதிரடி யோசனை..!


நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.

இது திரையுலக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜேப்பியார் கல்வி குழும வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த பல ஆவணங்கள் நடிகர் விஜய்க்கும் இதில் தொடர்பு இருப்பது போன்ற சந்தகத்தை ஏற்படுத்தியது தான் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு காரணம் என கூறுகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, பா.ஜா.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி. நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் கையாண்ட விதம் சரியில்லை என்று அவர் நினைத்தால் நிச்சயம் அவர் வழக்கு தொடரலாம்" என்று யோசனை வழங்கியுள்ளார்.

முன்னதாக, மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்த போது வேலை நேரத்தில் குறுக்கீடு செய்வதாக கூறி அவர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுத்துள்ளார். மேலும், எனக்கு எந்த விதமான சம்மனும் அனுப்பாமல் இப்படி செய்வது சரியல்ல எனவும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, உடனடியாக ஈ-மெயில் மூலம் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனால், வேறு வழியின்றி நடிகர் விஜய் வருமான வரித்துறையினருடன் இன்னோவா காரில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

Share it with your Friends