இரண்டாவது குழந்தைக்கு சினேகா-பிரசன்னா இப்படி ஒரு பெயர் வைத்துள்ளார்களா..?


புன்னகை அரசி நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். 

இவைகளுக்கு, முதலில் ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசன்னா தை மகள் வருகிறாள் என்று டுவிட்டரில் தகவல் வெளியிட ரசிகர்களும் வாழ்த்து கூறி வந்தனர். 

இந்த நிலையில் பிரசன்னா ஒரு பேட்டியில் பேசும்போது, முதலில் பெண் குழந்தை தான் பிறக்கும் என்று நாங்கள் "ஆத்யா" என்ற பெயரை தேர்வு செய்தோம், ஆனால் ஆண் குழந்தை பிறந்தது.இதனால், "பிரசன்ன விஹான்" என்ற பெயரை வைத்தோம்.

இந்நிலையில், இப்போது எங்களுக்கு பெண் குழந்தை, வேறு பெயரின் மீது விருப்பம் இல்லை. எனவே "ஆத்யந்தா" என்ற பெயரை மகளுக்கு வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

ஆத்யந்தா என்றால் ஆதி+அந்தம் என்று பொருள். ஆதியும் அவளே, அந்தமும் அவளே என்பதை குறிக்கும் விதமாக ஆத்யந்தா என்ற பெயரை வைத்துள்ளனர். ஆதியந்தம் என்பது சிவனை குறிக்கும் பெயர் என்பது குறிப்பிடதக்கது.
Advertisement

Share it with your Friends