வாவ்..! - ஸ்லீவ்லெஸ் உடையில் விழாவிற்கு வந்து ரசிகர்களின் வாயை பிளக்க வைத்த நடிகை சமந்தா..! - வைரல் புகைப்படங்கள்..!


தமிழ், தெலுங்கில் சமந்தா முன்னணி நடிகையாக இருக்கிறார். 2010–ல் பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நான் ஈ, அஞ்சான், கத்தி, தெறி, மெர்சல், இரும்புத்திரை, யூ டர்ன் உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு முக்கிய படங்களாக அமைந்தன. 

சீமராஜா, யூ டர்ன், நடிகையர் திலகம், தெலுங்கில் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஜோடியாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்து உள்ளார். 2017–ல் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். 

நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன். ஏ மாய சேசாயே தெலுங்கு படத்தில் நாகசைதன்யாவும், சமந்தாவும் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். 

திருமணத்துக்கு பிறகும் சமந்தா படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '96'. இது தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது, அந்தப் படம் 'ஜானு' என்ற தலைப்பில் தெலுங்கில் ரீமேக் செய்து பிப்ரவரி 7-ம் தேதி வெளியிட்டார்கள்.


இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரும் நடிகை சமந்தா புடவை சகிதமாக கலந்து கொண்டு ரசியக்ர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வந்தார்.


அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் மற்றும் Jaanu என பிரிண்ட் செய்யபட்ட புடவை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Share it with your Friends