நடிகை ரம்யா நம்பீசனின் புது அவதாராம்..!


விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "பீட்சா" படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன். 

சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் கவர்ச்சிக்கு எதிரானவள் இல்லை. சினிமாவில் கவர்ச்சி ரொம்பவும் முக்கியம். ஆனால் என்னிடம் கவர்ச்சி இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். உடம்பை காட்டும் கவர்ச்சியில் இதுவரை எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. 

காரணம் என் உடல்வாகுக்கு கவர்ச்சியாக நடிக்க முடியாது. நடித்தாலும் நன்றாக இருக்காது. குடும்ப பாங்கான நடிப்புக்கும், நடிப்புக்கு நல்ல தீனிபோடும் கேரக்டர்களுக்குதான் நான் பொருத்தமானவள். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு வெட்கம் இல்லை. 

கவர்ச்சிகாட்டும் உடல்வாகுள்ள நடிகைகள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பதையும் உணர்கிறேன். கவர்ச்சி வேறு மார்டனாக நடிப்பது வேறு என்பதை தெளிவாக்கி கொண்டால் நான் சொல்வது புரியும் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், பாபு யோகேஸ்வரன் இயக்கும், தமிழரசன் படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வரும் ரம்யா நம்பீசன், பாடகி, நடிகை என்பதை தாண்டி இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். ஆம், குறும்படம் ஒன்றை இயக்கியதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். 

இந்த குறும்படம் குறித்து அவர் கூறுகையில், ''அன்ஹைட் என்ற தலைப்பில், 3 நிமிட படம் ஒன்றை இயக்கியுள்ளேன். காதல் குறித்து வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்தும் இப்படத்தை, 14ம் தேதி வெளியிடுவேன்,'' என்றார்.
Advertisement

Share it with your Friends