"மாநாடு" படத்தில் சிம்புவின் பெயர் இது தான் - அறிவித்தார் வெங்கட் பிரபு..!


நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபுகூட்டணியில் உருவாகும் மாநாடுபடத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு என்ன இஸ்லாமிய பெயர் வைக்கலாம் என ரசிகர்களிடம் கருத்துகேட்கப்பட்டது.

படத்தில் நடிகர் சிம்பு இஸ்லாமியராக நடிக்கிறார் என்று கூறப்படுகின்றது. அதன் படி, ரசிகர்கள்தங்களுக்கு பிடித்த இஸ்லாமிய பெயரை நடிகர் சிம்புவிற்கு பரிந்துரை செய்யலாம். 

இந்நிலையில், "அப்துல் காலிக்" என்ற பெயரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் வெங்கட் பிரபு.
Advertisement

Share it with your Friends