" செய்கை காத்திருக்கு " - இணையத்தில் கசிந்த "அண்ணாத்த" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!


தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கிராமத்து பின்னணியில் கதை உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 

நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.அண்ணாத்த படத்தின் கதை புதிது அல்ல. அது சிவா அஜித்துக்காக எழுதிய கதை. 

சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்திடம் கதை சொல்ல அவரோ இது வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதையடுத்து அந்த கதையை பத்திரமாக வைத்திருந்த சிவா தற்போது அதை ரஜினியிடம் கூற அவரோ, நல்லா இருக்கே, நாம பண்ணலாமே என்று கூறி நடித்துக் கொண்டிருக்கிறாரார் என்ற தகவலும் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருகின்றன. 

ரஜினிக்கான மாஸ் காட்சிகள் ரசிகர்களின் நரம்பை புடைக்க வைக்கும் எனவும் முக்கியமாக அரசியல் சார்பு கருத்துக்கள் இந்த படத்தில் எதிர்பார்க்க முடியாது எனவும் கூறுகிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இது தான் என ஒரு போஸ்டர் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. 

ஆனால், விசாரித்த போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்னும் உருவாக்கவே இல்லை என்று படக்குழு தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது. எனவே, இது ரசிகர் யாரோ தயாரித்த போஸ்டர் என்பது தெரிய வந்துள்ளது.


" செய்கை காத்திருக்கு " - இணையத்தில் கசிந்த "அண்ணாத்த" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! " செய்கை காத்திருக்கு " - இணையத்தில் கசிந்த "அண்ணாத்த" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..! Reviewed by Tamizhakam on February 29, 2020 Rating: 5
Powered by Blogger.