ரஜினிகாந்தை "யாரு நீங்க..?" என்று கிண்டல் செய்தவர் கைது..! - காரணம் கேட்டால் குபீர்-ன்னு சிரிச்சுடுவீங்க..!


கடந்த 2018-ம் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் துாத்துக்குடி துப்பாக்கி சூடு. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்து நிதியுதவியும் செய்தார்.

அப்படி, மருத்துவமனையில் அவர்களை ஒவ்வொருவராக நலம் விசாரித்து வரும் போது வாலிபர் ஒருவர் ரஜினியை "நீங்க யாரு..?" என கிண்டலடித்த விஷயம் ட்ரெண்டானது. 

அந்த, இப்போது வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதாகியுள்ளார். துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார் 24.இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. 

வடபாகம் போலீசார் விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ் 23, மற்றும் கால்டுவெல் காலனி மணி23, ஆசிரியர் காலனி சரவணன் 22, ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது.

இந்த மூவரில் 23 வயதான சந்தோஷ் தான் ரஜினியிடம் "நீங்க யாரு..?" என்று கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினிகாந்தை "யாரு நீங்க..?" என்று கிண்டல் செய்தவர் கைது..! - காரணம் கேட்டால் குபீர்-ன்னு சிரிச்சுடுவீங்க..! ரஜினிகாந்தை "யாரு நீங்க..?" என்று கிண்டல் செய்தவர் கைது..! - காரணம் கேட்டால் குபீர்-ன்னு சிரிச்சுடுவீங்க..! Reviewed by Tamizhakam on February 21, 2020 Rating: 5
Powered by Blogger.