முதன் முறையாக மூன்றாம் கணவரை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் ரேஷ்மா - வைரலாகும் நெருக்கமான செல்ஃபி போட்டோ..!


இயக்குனர் லக்‌ஷ்மண் குமார் இயக்கிய ‘மசாலா படம்’ மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மா. 

அதைத் தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் சூரி ஜோடியாக புஷ்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். ‘புஷ்பா புருஷன்’ எனும் டயலாக், அந்தப் படத்தில் பயங்கர ஹிட்டானது. 

தொடர்ந்து ‘கோ 2’, ‘மணல் கயிறு 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர், கடந்த ஜூன் மாதம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில், போட்டியாளராகக் கலந்து கொண்டார். 

அதில், தன்னுடைய சோகக்கதைகளைச் சொல்லி, பெரும்பாலானவர்களின் மனதில் இடம் பிடித்தார். ரேஷ்மாவுக்கு, பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் முதல் திருமணம் நடைபெற்றது. அந்த வாழ்க்கை சில வருடங்களில் கசக்க, கணவரைப் பிரிந்தார். 

பின்னர், அமெரிக்காவில் வசித்தபோது, அங்கு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். ஆனால், இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரேஷ்மா. 

அப்போதுதான் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில், ரேஷ்மா மூன்றாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. 

தற்போது, அதனை உறுதி படுத்தும் வண்ணம்காதலர் தினமான இன்று தனது காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்ப்டத்தை வெளியிட்டு "நானும், எனக்கானவரும்" என்று தலைப்பு வைத்து காதலர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார் அம்மணி.

Advertisement

Share it with your Friends