நடிகையின் அந்த முடிவுக்கு எகிறிய எதிர்ப்பு - தாறு மாறு காட்டிய நடிகர்கள் - பின் வாங்கிய முன்னணி நடிகை..!


நம்ம ஊரு சமத்தான நடிகை அக்கட தேசத்து நடிகரை கல்யாணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இப்போ என்ன வயசாகிடுசுன்னு கல்யாணம் பண்ணிகிட்டீங்க என்று கேட்டனர் அவரது ரசிகர்கள். ஆனால்,கவலைபப்படாதிங்க தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என கூறி அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.

சொல்லப்போனால் திருமணத்திற்கு முன்பு இருந்ததை விட திருமணத்திற்கு பிறகு அம்மணியின் காட்டில் அடை மழைதான். சினிமா, குடும்பம் என குஷியாக சினிமா வாழ்கையையும், குடும்ப வாழ்கையும் ஓட்டி வருகிறார் அம்மணி.

இந்நிலையில், இங்கு ஹிட் ஆன ஒரு படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார் அம்மணி. இங்கு ஹிட் அடித்தது போல, அக்கட தேசத்திலும் ஹிட் அடிக்க ஆனந்தத்தில் உள்ளார் அம்மணி.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் "விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட போகிறேன். குடும்பம், குழந்தை என்ற வாழ்க்கை மீது எனக்கு ஆசை வந்து விட்டது. நான் சினிமாவில் நீடிப்பது கஷ்டம்." என்று கூறி ரசிகர்கள் நெஞ்சில் குண்டை தூக்கி போட்டார் அம்மணி.

இதனை தொடர்ந்து, அம்மணிக்கு தொலைபேசியில் ஆட்வைஸ் மழை பொழிய ஆரம்பித்து விட்டார்களாம் முன்னணி நடிகர் இப்பதான், நல்ல கேரக்டர்ல நடிக்கத் தொடங்கியிருக்கே, அதுக்குள்ள சினிமாவுல இருந்து ரிடையர்ட் ஆகிட்டேன்னா, வாழ்க்கை போரடிச்சுரும். இப்ப கிடைக்கிற வாய்ப்பு பிறகு கிடைக்காது. அதனால போகிற வரை நடி' என்று அட்வைஸ் செய்தார்களாம். 

கூடவே சில சினிமா மானேஜர்கள் மற்றும் விளம்பர பட நிறுவனங்களிடம் ரிடையர்மென்ட் செய்தி பரவினால், 'இப்பவே ஒதுக்கி விடுவார்கள் என்று அட்வைஸ் செய்தார்களாம். இதனால், தன்னுடைய முடிவில் இருந்துபின் வாங்கி விட்டாராம் அம்மணி.

நடிகையின் அந்த முடிவுக்கு எகிறிய எதிர்ப்பு - தாறு மாறு காட்டிய நடிகர்கள் - பின் வாங்கிய முன்னணி நடிகை..! நடிகையின் அந்த முடிவுக்கு எகிறிய எதிர்ப்பு - தாறு மாறு காட்டிய நடிகர்கள் - பின் வாங்கிய முன்னணி நடிகை..! Reviewed by Tamizhakam on February 14, 2020 Rating: 5
Powered by Blogger.