முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ப்ரியா ஆனந்த்..!


நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான "வாமனன்" படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதனை தொடர்ந்து, நடிகர் சித்தார்த்துடன் 180, சிவகார்த்திகேயனுடன் எதிர் நீச்சல், சிவாவுடன் வணக்கம் சென்னை படங்களில் நடித்தார். 

மேலும், விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, கௌதமுடன் முத்துராமலிங்கம், அசோக் செல்வனுடன் கூட்டத்தில் ஒருத்தன் படத்தில் நடித்திருந்தார். பின் ஆர்.ஜே பாலாஜியுடன் ஜோடியாக நடித்த எல்.கே.ஜி படம் இவருக்கு வெற்றியை அளித்தது. 

சமீபத்தில், அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் படமாக "ஆதித்ய வர்மா" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ப்ரியா ஆனந்த். தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்து வரும் இவர் தமிழில் சுமோ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், கன்னடத்தில் முன்னணி நடிகராக வளம் வரும் சிவராஜ் குமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை இயக்குனர் ரவியரசு இயக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ப்ரியா ஆனந்த்..! முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ப்ரியா ஆனந்த்..! Reviewed by Tamizhakam on February 24, 2020 Rating: 5
Powered by Blogger.