காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறிய நயன்தாரா..!


நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று இருவரும் சொல்லாவிட்டாலும், பிறந்தநாள், பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்திலும் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். 

அதற்கான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவார். தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா சுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று வந்தார். 

அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார் நயன்தாரா. அந்த வகையில், பிப்ரவரி 14, காதலர் தினமான இன்று இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார் நயன்தாரா.


Advertisement

Share it with your Friends