அரசியல் கட்சியில் இணைந்தார் இயக்குனர் பேரரசு - இது தான் காரணமாம்..!


நடிகர் விஜய், அஜித், விஜயகாந்த் என பல முன்னணி தமிழ் ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் இயக்குனர் பேரரசு. அடுத்ததாக நடிகர் விஜய்க்கு கதை கூறியிருக்கிறார் என்றும் விரைவில் இவர் மீண்டும் கூட்டணி அமைப்பார்கள் என்று கூட செய்திகள் வந்தது. 

ஆனால், அவருக்கு விஜய்யை மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா..? என்பது கேள்விக்குறியாக உள்ளது. சமீப காலமாக, சமூகநீதி, பகுத்தறிவு என்று இந்து மதத்திற்கு எதிரான பலதரப்பட்ட அரசியல் தலைவர்களும் தொடர்ச்சியாக பேசி வருகிறார்கள்.

இது இந்து மக்களின் மனதை பெருமளவில் பாதித்துள்ளது. எந்த மதத்தையும் அதனுடைய சடங்குகளையும் இழிவாக பேசுவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து வருகிறது. குறிப்பாக, மோடி எதிர்ப்பு என்ற போர்வையில் இந்து மதத்திற்கும், இந்தியாவிற்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளன சில அரசியல் கட்சிகள். இந்நிலையில். ஈ.வெ.ராமாமி குறித்த ரஜினிகாந்த்தின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்திருந்த இயக்குனர் பேரரசு தற்போது பேரரசு அரசியலில் குதித்துள்ளார். 

ஆம், தமிழக பா.ஜ.க.வில் அவர் தன்னை இணைந்து கொண்டுள்ளார். அந்த கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்துள்ளார். பாரத பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக பேரரசு தெரிவித்துள்ளார்.
Advertisement

Share it with your Friends