என் பெயருக்கு முன்னால் இந்த பட்டத்தை போட்டால் தான் வருவேன் - அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி - அதிர்ச்சியில் படக்குழு..!


எனக்கு "மக்கள் செல்வி" என்று பட்டம் கொடுத்தால் தான் நான் படத்தின்ப்ரோமோஷன் நிகழ்சிகளில்கலந்து கொள்வேன் என நடிகை வரலக்ஷ்மி அடம் பிடித்து வருகிறாராம்.

கடந்த ஆண்டு மட்டும் எட்டு படங்களில் நடித்த வரலக்ஷ்மி. தற்போது ராஜபார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த 
படத்தின் ப்ரமோஷனுக்கு வர வேண்டும் என்றால் "மக்கள் செல்வி" என்ற பட்டம் கொடுக்க வேண்டும் என அடம் பிடித்து வருகிறாராம்.

இதனால், இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ராஜபார்வை படத்தில் வரலட்சுமி மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கிறார். திரில்லர் ஜானர் படமான இது நிறைய ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக வரும் என்கிறார்கள். 

இந்த படத்திற்காக வரலட்சுமி சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளார். முக்கியமான சண்டை பயிற்சியாளர்களிடம் சண்டை பயிற்சி, கத்தியை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்.இந்த படத்தில் தன்னுடைய பெயரை டைட்டில் கார்டில் "மக்கள் செல்வி" வரலட்சுமி என்று போட வேண்டும் என்று வரலட்சுமி கேட்டுள்ளார். 

ஆனால், இதற்கு படக்குழு ஒப்புக்கொள்வது போல தெரியவில்லை. வரும் மார்ச் மாதம் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு பெரிய அளவில் எந்த ப்ரமோஷனும் நடக்கவில்லை. இந்நிலையில், வரலக்ஷ்மி ஒரு பக்கம் பட்டப் பெயருக்கு சண்டை போட்டு வரும் நிலையில் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது..

என் பெயருக்கு முன்னால் இந்த பட்டத்தை போட்டால் தான் வருவேன் - அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி - அதிர்ச்சியில் படக்குழு..! என் பெயருக்கு முன்னால் இந்த பட்டத்தை போட்டால் தான் வருவேன் - அடம் பிடிக்கும் வரலக்ஷ்மி - அதிர்ச்சியில் படக்குழு..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.