சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் - கொலைகார டாக்டரா இருப்பார் போலயே..!


கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டாக்டர்’. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

கேஜேஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடங்களில் நடிப்பதாக  தகவல்கள் வெளியாகின. 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17 அன்று காலை 11.03 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பைப் பெற்றது. 

எனவே நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், சற்று முன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

இதில், கையில் ரத்த கரையுடன் கேஷுவலாக அமர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனை சுற்றி அறுவை சிகிச்சை செய்யும் கத்திகள் மற்றும் கூரான உபகரணங்கள் பறக்கின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் கொலைகார டாக்டரா இருப்பார் போலயே என்று கூறிவருகிறார்கள்.


சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் - கொலைகார டாக்டரா இருப்பார் போலயே..! சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் - கொலைகார டாக்டரா இருப்பார் போலயே..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.