கோவை கல்லூரி விழாவில் அஜித் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் லாஸ்லியா - வைரலாகும் வீடியோ..!


பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளர் லாஸ்லியா.

இவர் இப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரி ஒன்றின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் மாணவர்கள் முன்பு அஜித்தின் வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நாடு முழுதும் எத்தனையோ அறிவியல் அறிஞர்கள், கல்வியியல் வல்லுனர்கள், பிரபல நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் என இருக்கும் போது இப்படி தொலைக்காட்சி பிரபலங்களையும், சினிமா நடிகைகளையும் அழைத்து வந்து மாணவர்கள் முன்பு குத்தாட்டம் போடா சொல்லும் கல்லூரிகள் மாணவர்களுக்கு எந்த மாதிரியான வழியை காட்டுகின்றன என்பது இந்த நேரத்தில் இயல்பாக எழக்கூடிய கேள்வி.
Advertisement

Share it with your Friends