குருவி, காக்கா-ன்னுலாம் படம் எடுத்தா ஓடுமா..? - விஜய்யை கிண்டலடித்த சைக்கோ பட நடிகை.!


இயக்குனர் மிஸ்கின் இயக்கிய "சைக்கோ" படத்தில் சைக்கோ-வாக வரும் நபர் சைக்கோவாக மாறுவதற்கு காரணமாக இருந்த டீச்சர் வேடத்தில் நடித்திருந்தவர் நடிகை "பிரித்தம்". 

படத்தில் "பீடி இருக்கா?’ என ஜெயிலில் இருந்து கொண்டும் கேட்கும் காட்சியிலும் பிறகு ஏன் அவன் சைக்கோவாக மாறினான் என்பது பற்றிய சிறிய விளக்கம் கொடுக்கும் ரோலில் தான் பிரித்தம் நடித்தார். 

இந்நிலையில், அவர் தற்போது அளித்துள்ள பேட்டியில் தமிழ் சினிமா துறையை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, நடிகர் தனுஷ் மட்டும் தான் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கிறார் என்று கூறிய அவர் அசுரன் படத்தை பாராட்டினார். 


மேலும், கூறிய அவர் அசுரன் இந்தியாவிலும் ஓடும், அமெரிக்காவிலும் ஓடும். ஆனால், குருவி, காக்கா-ன்னுலாம் படம் எடுத்தாங்களே அது ஓடியதா? என மறைமுகமாக நடிகர் விஜய்யை கிண்டலடிக்கும் படி பேசியுள்ளார் பிரித்தம்.
Advertisement

Share it with your Friends