தேசிய கட்சியில் ஐக்கியமாகவுள்ள பிரபல நடிகர்..! - இது தான் காரணமாம்..!


தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் தற்போது தனிக்கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சனையில் இருக்கும் அவருக்கு இப்போது பெரிய தொகை ஒன்று அவசரமாக தேவைப்படுகிறதாம். 

இதனால் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலையில் சிக்கி தவிகிராராம். கடன்கொடுத்தவர்கள் பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு நடிகரிடம் கறார் காட்டாமல் அமைதியாக பேசி வருகிறார்களாம்.

நடிகர் நீண்ட கால நண்பர் என்பதால் தான் கோர்ட் கேஸ் என போகாமல் இருக்கிறார்கள். ஆனால், இப்படியே போனால் வேறு வழியில்லை சொத்தை எழுதி கொடுத்துருங்க எனவும், கோர்ட் கேஸ் என போனால் உங்கள் பெயர் கெட்டு போயிடும்ன்னு பாக்குறோம் என அன்பாக கூறி வருகிறார்களாம்.

பட தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் தான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். இப்போது, படங்களில் நடித்து வந்தாலும் கடனை அடைக்கும் தொகையை ஏற்பாடு செய்வதில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

இதனால்,சமீபத்தில் கவர்ச்சி நடிகை ஒருவர் இணைந்த தேசிய கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளாராம். மேலும், தன்னுடைய கடனை அடைக்கும் அளவுக்கு தொகை கிடைத்தால் அந்த தேசிய கட்சியில் ஐக்கியமாகி விடவும் தயாராக உள்ளாராம்.

தேசிய கட்சியில் ஐக்கியமாகவுள்ள பிரபல நடிகர்..! - இது தான் காரணமாம்..! தேசிய கட்சியில் ஐக்கியமாகவுள்ள பிரபல நடிகர்..! - இது தான் காரணமாம்..! Reviewed by Tamizhakam on February 16, 2020 Rating: 5
Powered by Blogger.