அர்த்தம் தெரியாமலே கெட்ட,கெட்ட வார்த்தையில் பேசிய நித்யா மேனன் - ரசிகர்கள் ஷாக்..!


நடிகை நித்யா மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சைக்கோ. இந்த படத்தில் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார்.இவருடைய கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த படத்தில், சில காட்சிகளில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசி நடித்திருந்தார் நித்யா மேனன். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் போனார்கள். 

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர் " படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மிஷ்கின் இந்த வார்த்தைகளை கூறும் போது எனக்கு புதுமையாக இருந்தது. ஏனென்றால், அந்த வார்த்தைகளை நான் முன்பு கேள்விப்பட்டதும் கிடையாது. பேசியதும் கிடையாது. அதற்க்கு அர்த்தமும் தெரியாது" என்று அவரிடம் கூறினேன்.

இதனை கேட்ட மிஷ்கின், "ஓ.. அர்த்தம் தெரியாதா..? அப்போ பேசிவிடு" என்று கூறினார். என கூறியுள்ளார் நித்யா மேனன்.
Advertisement

Share it with your Friends