திரைப்படங்கள் தலைப்பில் அதிகரிக்கும் டிவி சீரியல்கள் - பிரபல தயாரிப்பாளர் விளாசல் - அதிரடி ஸ்டேட்மென்ட்..!


இப்போதெல்லாம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு பெரும்பாலும் திரைப்படங்களின் தலைப்பு தான் வைக்கப்படுகிறது. அந்த தலைப்புகள் மக்களிடம் ஏற்கெனவே பிரபலமாகி இருப்பதால் அது சீரியல்களின் ரீச்-சிற்கு உதவுகின்றது. 

மௌனராகம் தொடங்கி யாரடி நீ மோகினி , ராஜா ராணி என இப்போது மின்னலே வரை சீரியல்கள் வந்து விட்டன. அடுத்து, தர்பார், வாரணம் ஆயிரம், போக்கிரி, மங்காத்தா என சீரியல்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிலையில், இதற்கு பிரபல தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகியுமான கேயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சின்னத்திரை தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், முறையான அனுமதியில்லாமல் சினிமா படங்களின் தலைப்புகளை பயன்தடுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைப்படத்திற்கு கதை, காட்சிகள் உடல் என்றால், தலைப்பு என்பது தான் தலை போன்றது. 

தலைப்பு மிகவும் முக்கியமானது. ஒரு படத்திற்கு முக்கியமாக தலைப்புதான் அங்கீகாரம். தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல, இயக்குனர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தலைப்பு தான் அங்கீகாரம். 

ஆனால், டி.வி தொடர்களில் சர்வ சாதாரணமாக சினிமா தலைப்புகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். என் படங்களான ஈரமான ரோஜாவே, இரட்டை ரோஜா, பூவே பூச்சூடவா போன்ற படங்களின் தலைப்புகளை தொடர்களுக்கு வைத்திருக்கிறார்கள். 

தலைப்புகள் சம்பந்தமாக யாரிடமும் முறையாக அனுமதி வாங்குவதும் இல்லை. முறையில்லாமல் எங்கள் சினிமா தலைப்புகளை பயன்படுத்தி ஆதாயம் தேடி கொள்கிறார்கள். 

ஒரு தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல் சீரியல் எடுப்பது என்பது மிக வேதனையாக இருக்கிறது. இது கண்டனத்திற்கும் உரியது. ஆகவே டி.வி தொடர்களுக்கும், சினிமாவைப் போல் தணிக்கை இருந்தால், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தவிர்க்கலாம். 

இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சட்டப்படி நீதிமன்றத்தை அணுக உள்ளேன்.என கூறியுள்ளார் தயாரிப்பாளர் கேயார்.

திரைப்படங்கள் தலைப்பில் அதிகரிக்கும் டிவி சீரியல்கள் - பிரபல தயாரிப்பாளர் விளாசல் - அதிரடி ஸ்டேட்மென்ட்..! திரைப்படங்கள் தலைப்பில் அதிகரிக்கும் டிவி சீரியல்கள் - பிரபல தயாரிப்பாளர் விளாசல் - அதிரடி ஸ்டேட்மென்ட்..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.