யாரோ செய்து தவறுக்கு நான் கஷ்டப்படுகிறேன் - நடிகர் சந்தானம் படம் குறித்து இயக்குனர் வேதனை..!


காமெடி நடிககராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கியவர் சந்தானம். வருடத்திற்கு 15 முதல் 20 படங்கள். கணக்கு போட்டால் ஹீரோக்களை விட அதிக வருமானம் சம்பாதிக்கும் நடிகராக வளம் வந்து கொண்டிருந்த அவர் திடீரேனே இனிமேல் நோ காமெடி ஒன்லி ஹீரோயிசம் என இறங்கி அந்த முடிவில் இருந்து பின் வாங்காமல் நிற்கிறார். 

அந்த வகையில், சந்தானம் ஹீரோவாக நடித்த 2015-ம் ஆண்டே எடுக்கப்பட்ட படம் "சர்வர் சுந்தரம்". தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சனை காரணாமாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய் கொண்டிருந்தது. 

பல முறை ரிலீஸ் அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே தேதியில் சந்தானத்தின் மற்றொரு படமான "டகால்டி" ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதால் பிரச்சனை எழுந்தது. 

இறுதியில் டகால்டி ரிலீஸ் ஆனது, "சர்வர் சுந்தரம்" மீண்டும் தள்ளிப்போனது. பிப்ரவரி 14-ம் தேதி என அறிவிக்கப்பட்டபடி அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது அடுத்த வாரம் (பிப்ரவரி 21ம் தேதி) ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. 

இந்நிலையில் இது பற்றி இயக்குனர் ஆனந்த் பால்கி ட்விட்டரில் வேதனையுடன் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

"ரிலீஸ் தேதியில் உள்ள குழப்பத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விளம்பரத்திற்காக வரும்படி சந்தானம் மற்றும் மற்ற டெக்னிஷியன்களிடம் கேட்டேன். அவர்களது பதில் வேதனை தந்தது. யாரோ செய்த தவறுக்கு நான் அனுபவிக்கிறேன். மன்னித்துவிடுங்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாரோ செய்து தவறுக்கு நான் கஷ்டப்படுகிறேன் - நடிகர் சந்தானம் படம் குறித்து இயக்குனர் வேதனை..! யாரோ செய்து தவறுக்கு நான் கஷ்டப்படுகிறேன் - நடிகர் சந்தானம் படம் குறித்து இயக்குனர் வேதனை..! Reviewed by Tamizhakam on February 15, 2020 Rating: 5
Powered by Blogger.