நயன்தாரா வழியில் நானா..?- பதறியடித்துக்கொண்டு பதிலளித்த நடிகை திரிஷா..!


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை திரிஷா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோயின் சப்ஜெக்ட் படமான "பரமபத விளையாட்டு" விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்சிகள் நடை பெற்று வருகின்றன. 

தான் நடித்துள்ள படங்களில் ப்ரோமோஷன்களுக்கு அழைப்பு விடுத்தால் எங்கிருந்தாலும் தவறாமல் ஆஜராகி விடுவார் திரிஷா. அதனால், பரமபத விளையாட்டு படத்தின் பிரமோஷனுக்கும் திரிஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால்,இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு திரிஷா வரமாட்டார் என்றும் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் "பொன்னியின் செல்வன்" படத்தின் போட்டோ ஷூட்டில் இருக்கிறார் என்று கூறப்பட்டது. இதனால், நடிகை நயன்தாராவாபின் தொடர்கிறார் திரிஷா என்ற பேச்சு எழுந்தது.

சுதாரித்து கொண்ட திரிஷா, கண்டிப்பாக நான் பிரமோஷனில் கலந்து கொள்வேன். நீங்கள் ஏற்பாட்டை ஆரம்பியுங்கள் என்று பதறியடித்துக்கொண்டு பதில் கூறியுள்ளார். காரணம், இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வருகிறது.சிலகாரணங்களால் தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போய்கொண்டே இருந்த நிலையில் இப்போது தான் படம் ரிலீசுக்குதயார் நிலையில் உள்ளது என்பதால் தான்.

இதனால், எப்போது ப்ரஸ்மீட் வைத்தாலும் தான் வர தயார் எனவும், தனக்காக பிரஸ்மீட்டை தள்ளி வைக்கவோ, ரத்து செய்யவோ வேண்டாம் எனவும் உறுதி அளித்துள்ளது திரிஷா தரப்பு. அத்துடன் போட்டோ சூட்டை முடித்துவிட்டு கண்டிப்பாக பிரஸ்மீட்டிற்கு வருவதாக தயாரிப்பளிடமும் த்ரிஷா கூறி இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisement

Share it with your Friends