ஹீரோயின் ஆனார் பிக்பாஸ் லாஸ்லியா - ஹீரோ யாரு தெரியுமா.? - இதோ பட பூஜை புகைப்படங்கள்..!


பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றவர் இலங்கையை சேர்ந்த பெண் செய்திவாசிப்பாளர் லாஸ்லியா. அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் அந்த படம் மூலம் கிடைத்தனர். 

மேலும், அவர் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக வாய்ப்பு கிடைக்கும் என அப்போதே பலரும் பேசினார்கள். பிக்பாஸ் முடிந்து பல மாதங்கள் ஆகியும் தனக்கு பிடித்த கதை வராததன் காரணமாக படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார்.

இந்நிலையில், தற்போது தமிழ் படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டகியுள்ளார் அம்மணி. நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 


இன்று இந்த படத்திற்க்கான பூஜை நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதுமட்டுமின்றி கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ப்ரெண்ட்ஷிப் என்ற தமிழ் படத்திலும் லாஸ்லியா தான் ஹீரோயின் என அறிவித்துள்ளனர்.
Advertisement

Share it with your Friends