முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா..! - திகில் முடிவு..!

 
நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் . இந்நிலையில் இவர் கோலிவுட் சினிமாவில் "பாணா காத்தாடி" படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
அதன் பிறகு சில படங்களில் நடித்த சமந்தா அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஆரம்பித்து தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவை கலக்கினார்.
 
இந்நிலையில், இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான "Jaanu" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பல விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள சமந்தா, முதன் முறையாக திகில் படம் ஒன்றில் தற்போது பேய் வேடத்தில் நடிக்க உள்ளதாக சில தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
இப்படத்தை "மாயா", "கேம் ஓவர்" ஆகிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் என்பவர் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக, பேய் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகைகள் தயங்குவார்கள். ஆனால், சமந்தா அதனை தில்லாக ஒப்புக்கொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா..! - திகில் முடிவு..! முன்னணி நடிகைகள் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சமந்தா..! - திகில் முடிவு..! Reviewed by Tamizhakam on February 26, 2020 Rating: 5
Powered by Blogger.