விஜய்க்கு அந்த பயம் இருக்கிறது - வெளிப்படையாக கூறிய காமெடி நடிகர்..!


நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக, விஜய் படங்கள் என்றால் அந்த படங்களை சுற்றி ஏதாவது ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டே இருக்கும். 

ஆனால், மாஸ்டர் படத்தை சுற்றி மட்டும் இதுவரை பெரிய பஞ்சாயத்து எதுவும் வரவில்லை. மாறாக, விஜய்யை சுற்றியே பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருகின்றது. நடிகர் விஜய் சமீபத்தில் வருமான வரித்துரை சோதனையில் சிக்கினார்.

இதற்கு ஆளும் கட்சி தான் காரணம் என அரசியலாக்கி விஜய் ரசிகர்களை தங்களுக்கு ஆதரவாக திருப்பிக்கொண்ட எதிர்கட்சிகள். இப்படி இந்த விவகாரம் நீண்டு கொண்டே போகின்றது.

இந்நிலையில், நடிகர் தம்பி ராமையா சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "புலி படப்பிடிப்பின் போது நான் 5 மணிக்கு எழுவேன். ஆனால், விஜய் அதற்கு முன்பே எழுந்து ஜாக்கிங் போக ஆரம்பித்து விடுவார். காரணம், அவரது ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்கிறார்கள் என்ற பயம் எப்போதும் அவரிடம் இருக்கின்றது" என கூறியுள்ளார்.
Advertisement

Share it with your Friends