கணவருடன் காருக்குள் ரொமான்ஸ் போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா - வைரலாகும் புகைப்படம்..!


சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்கு பிறகு நடிகை ஸ்ரேயா சரண் எந்த தமிழ் படங்களிலும் கமிட்டாகாமல் ஒரு ப்ரேக் விட்டார். 

அதன் பிறகு அரவிந்த் சாமியின் ‘நரகாசூரன்’ மற்றும் விமலின் ‘சண்டக்காரி’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டும் நடிக்க ஒப்பந்தமானார். இதில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். 

இந்த படத்தில் அரவிந்த் சாமி – ஸ்ரேயா சரணுடன் இணைந்து இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன், ஆத்மிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு ரான் யோஹான் இசையமைத்துள்ளார். 

ஏற்கனவே, வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. படத்தை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். 

சமீப காலமாக ஸ்ரேயா சரண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போது காருக்குள் கணவன் மீது தொடையை போட்டுக்கொண்டு அவர் இசைக்கும் இசையை ரசித்தவாரு செம்ம ரொமாண்டிக்கான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.


கணவருடன் காருக்குள் ரொமான்ஸ் போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா - வைரலாகும் புகைப்படம்..! கணவருடன் காருக்குள் ரொமான்ஸ் போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on February 17, 2020 Rating: 5
Powered by Blogger.