" ரொமான்ஸ் போரடித்து விட்டது, இது தான் பிடித்துள்ளது " - திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் நமீதாவின் பேச்சு..!


குஜராத் மாநிலம் சூரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நமீதா. 2002-ம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
 
தொடர்ந்து ஏய், இங்கிலீஷ்காரன், வியாபாரி, அழகிய தமிழ்மகன், பில்லா உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

மச்சான்ஸ் என்று இவர் பேசும் தமிழுக்கு ரசிகர்களும் ஏராளம்.தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் பபடங்களில் நடித்து வந்த நமீதா பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.பிறகு, தனது காதலரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். 

இந்நிலையில், இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள "காக்டெயில்" படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நமீதா. 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நமீதா பேசுகையில், "எனக்கு ரொமாண்டிக் படங்கள் எல்லாம் போரடித்து விட்டது. இப்போதெல்லாம், காமெடி படங்கள் தான் எனக்கு பிடிக்கின்றது. 

இது போன்ற படங்களை தான் விரும்பி பார்க்கிறேன். என்று கூறியுள்ளார். திருமணம் ஆன இரண்டே வருடத்தில் ரொமான்ஸ் படங்கள் போரடித்து விட்டது என கூறியுள்ளார் நமிதா என்பது குறிப்பிடத்தக்கது.

" ரொமான்ஸ் போரடித்து விட்டது, இது தான் பிடித்துள்ளது " - திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் நமீதாவின் பேச்சு..! " ரொமான்ஸ் போரடித்து விட்டது, இது தான் பிடித்துள்ளது " - திருமணம் ஆகி இரண்டே ஆண்டுகளில் நமீதாவின் பேச்சு..! Reviewed by Tamizhakam on February 23, 2020 Rating: 5
Powered by Blogger.