அட கடவுளே..! என்னாச்சு உங்களுக்கு..! - கோரமாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி - ரசிகர்கள் ஷாக்.!


தமிழ் திரையுலகில் 'சுப்ரமணியபுரம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை சுவாதி. இவர் தமிழில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா', 'வடகறி', 'யட்சன்', 'யாக்கை' என சில படங்களில் நடித்து இருக்கிறார். 

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள சுவாதிக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் விமானியாக பணியாற்றும் விகாஸ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது, அந்த நட்பு நாளடைவில் அவர்களுக்குக் காதலாக மலர்ந்தது.

இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து, சுவாதி-விகாஸ் திருமணம் கடந்த ஆண்டு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து சுவாதி எந்த நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடிக்கவில்லை. 

இந்நிலையில் சுவாதி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பொதுவாக பெண்கள் திருமணத்திற்கு பின்பு குண்டாகி விடுவார்கள் என்பது தான் வழக்கம்.



ஆனால், சுவாதி விஷயத்தில் அதில் ரிவர்ஸ் ஆகி நடந்துள்ளது பொசு பொசுவென இருந்த சுவாதி தற்போது மிகவும் உடல் மெலிந்து ஒல்லிப்பிச்சான் போல ஆகி விட்டார்.


இதனை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு உங்களுக்கு என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதிலும், ஒரு புகைப்படத்தில் 70 வயது மதிக்கத்தக்க பெண் போல கோரமாக இருக்கிறார் சுவாதி.



அட கடவுளே..! என்னாச்சு உங்களுக்கு..! - கோரமாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி - ரசிகர்கள் ஷாக்.! அட கடவுளே..! என்னாச்சு உங்களுக்கு..! - கோரமாக மாறிய சுப்ரமணியபுரம் சுவாதி - ரசிகர்கள் ஷாக்.! Reviewed by Tamizhakam on February 20, 2020 Rating: 5
Powered by Blogger.