மீண்டும் நயன்தாரா உங்களை காதலிக்கிறேன் என்று கூறினால்..? என்ன பண்ணுவீங்க..?- நடிகர் சிம்பு அதிரடி பதில்..!


தமிழ் சினிமாவின் சர்ச்சைநாயகன் நடிகர் சிம்பு. சினிமா நடிகர்களை சுற்றி சர்ச்சை இருக்கத்தான் செய்யும். ஆனால், நடிகர் சிம்பு சர்ச்சையை சுற்றி இருப்பார்.அவ்வளவு தான் வித்தியாசம்.

சினிமா ரசிகர்கள் இவர் படங்களை பற்றி பேசியதை விட இவருடைய சர்ச்சைகளை பற்றி பேசியது தான் அதிகம். நயன்தாரா காதல் விவாகரத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சை.

இடையில் பீப் சாங் என்று ஒரு பாடல் இணையத்தில் கசிந்து சிம்புவின் இமேஜை தெருவில் இறக்கிவிட்டது. இப்போது, மாநாடு என்ற படத்தில் நடிக்கவுள்ளார். வரும் 28-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறுகிறார்கள்.

பார்ப்போம்.. இந்த படமாவது ட்ராப் ஆகாமல் ரிலீஸ் வரைமுன்னேறி வருமா..? என அலுத்துக்கொள்கிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு ரசிகர்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஒருவேளை நடிகை நயன்தாரா வந்து மீண்டும் உங்களை காதலிக்கிறேன் என்று கூறினால் என்ன செய்வீங்க..? என்ற கேள்வி கேட்கப்பட்டது.

சிறிதும் யோசிக்காத நடிகர் சிம்பு,   நாங்கள் இப்போது நண்பர்கள் மட்டுமே வேறு எதுவும் இல்லை. வேறு எதுவும் வேணாம் என அதிரடியாக கூறியுள்ளார்.

மீண்டும் நயன்தாரா உங்களை காதலிக்கிறேன் என்று கூறினால்..? என்ன பண்ணுவீங்க..?- நடிகர் சிம்பு அதிரடி பதில்..! மீண்டும் நயன்தாரா உங்களை காதலிக்கிறேன் என்று கூறினால்..? என்ன பண்ணுவீங்க..?- நடிகர் சிம்பு அதிரடி பதில்..! Reviewed by Tamizhakam on February 12, 2020 Rating: 5
Powered by Blogger.