எது..? மறுபடியும் ப்ரேக்-அப்பா..? - முன்னணி நடிகைக்கு காதலர் வைத்த அதிர்ச்சி "செக்" - ரசிகர்கள் ஷாக்..!


தமிழ் சினிமாவில் படம் ஹிட் ஆனாலும், ப்ளாப் ஆனாலும் நான் தான் கெத்து என்று வளம் வருகிறார் அந்த முன்னணி நடிகை. ஹீரோயின் சென்ட்ரிக் படமாக இருந்தாலும் சரி, ஹீரோவை சுற்றி சுற்றி வரும் சாதாரண ஹீரோயினாக நடித்தாலும் சரி சம்பளம் 5 கோடி ரூபாய். ஆனால், இவரது வயது 36-ஐ நெருங்கி கொண்டிருகின்றது.

ஏற்கனவே இரண்டு காதல்கள் ப்ரேக்-அப் ஆகி விட்ட நிலையில் இப்போது மூன்றாவதாக ஒரு இயக்குனருடன் காதலில் இருக்கிறார். இவர் காதலரா..? இல்ல, பாடி கார்டா..? என்று கேட்கும் அளவுக்கு தான் இருக்கிறார் அந்த இயக்குனர்.

இந்நிலையில், இருவரிடம் கடும் மனஸ்தாபம் ஓடிக்கொண்டிருகின்றது என்று கூறுகிறார்கள். இயக்குனரோ படம் இயக்குவதை விட்டு விட்டு இரண்டு ஆண்டுகளாக நடிகையின் பின்னாலே சுற்றி சுற்றி வருகிறார். ஆனால், நடிகை திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே டென்ஷன் ஆகி விடுகிறாராம்.

இன்னும் ஐந்து ஆண்டுகள் போகட்டும் அப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று குண்டை தூக்கி போடுகிறாராம் அம்மணி. ஏற்கனவே, வயசு 36-ஐ தாண்டிய அந்த இயக்குனர் இதனால் கடும் கோபத்தில் உள்ளாராம். என்னை ப்ரேக்-அப் பண்ண பாக்குறியா என்று சண்டை கூட நடந்துள்ளது என்கிறார்கள் அம்மணிக்கு நெருங்கிய வட்டாரங்கள். உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என்றும் செக் வைத்துள்ளாராம்.

இதனால், செய்வதறியாது நிற்கிறாராம் நடிகை. இப்போதைக்கு பிரச்னையை தள்ளி போடுவோம் என அடுத்த வருஷம் பேசலாம் என கூறியுள்ளார். இதனை கேட்டு கடுப்பான இயக்குனர் இதையே தான் கடந்த இரண்டு வருடமாக சொல்லிட்டு இருக்க என கோபமாக கூறினாராம். ஆனால் என்ன நடந்தாலும், திருமணம் மட்டும் செய்ய முடியாது என்று உறுதியாக அந்த நடிகை கூறிவிட்டாராம். விரைவில் இவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று இந்த ஜோடியின் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

எது..? மறுபடியும் ப்ரேக்-அப்பா..? - முன்னணி நடிகைக்கு காதலர் வைத்த அதிர்ச்சி "செக்" - ரசிகர்கள் ஷாக்..! எது..? மறுபடியும் ப்ரேக்-அப்பா..? - முன்னணி நடிகைக்கு காதலர் வைத்த அதிர்ச்சி "செக்" - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 19, 2020 Rating: 5
Powered by Blogger.